நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. எங்கு நடக்கபோகுது தெரியுமா? ஒளிபரப்பும் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் கண்ணாடி மாளிகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெறவுள்ள நிலையில் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமை 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. எங்கு நடக்கபோகுது தெரியுமா? ஒளிபரப்பும் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

இவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெறவுள்ளது. அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி. டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தையும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையையும் உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை இயக்குநர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகள் நேற்று முன்தினத்தில் இருந்து மெஹந்தி சடங்குகளுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகையை வாங்கி பரிசளித்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.