நயன்தாராவின் 75-வது படம்...அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட படக்குழு...!

நடிகை நயன்தாரா நடிக்கும் 75 வது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

நயன்தாராவின் 75-வது படம்...அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட படக்குழு...!

தமிழ். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என திரையுலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார், நயன்தாரா. தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள நயன்தாரா, தற்போது தமிழில் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதுமட்டுமல்லாமல், பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், கோல்ட் படத்திலும், தெலுங்கில் மோகன்ராஜா, சிரஞ்சீவி கூட்டணியில், காட்ஃபாதர் படத்திலும் நடித்து வருகிறார். 

இப்படி பிஸியாக நடித்து வரும் நயன்தாராவின் 75 வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. N75, அதாவது நயன்தாரா 75 படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நீலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். அதோடு இந்த இயக்குனருக்கு இது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து, வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.