பீஸ்ட் பட ஷூட்டிங் குறித்து பூஜா வெளியிட்ட  ஃபோட்டோ.. வைரல் புகைப்படம்

பீஸ்ட் பட ஷூட்டிங் குறித்து பூஜா வெளியிட்ட  ஃபோட்டோ.. வைரல் புகைப்படம்

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். 

அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விஜய்க்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே அவரது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டாராம். இதை பூஜாவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.