நடிகர் வடிவேலுக்கு ஜோடி போடும் பிரியா பவானி..? வைரல் புகைப்படம்

நடிகர் வடிவேலுக்கு ஜோடி போடும் பிரியா பவானி..? வைரல் புகைப்படம்

செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் சீரியல் மூலம் பிரபலமானார். பின்னர் அதையே பயன்படுத்தி சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

வைபவ் ஜோடியாக மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

மிகுந்த ரசிகர்களை தக்கவைத்து கொள்ள சமூகவலைத்தளத்தில் அவ்வபோது ஃபோட்டோக்களை போட்டு இளைஞர்களை கெறங்கடிப்பார். இந்நிலையில் நடிகர் வடிவேலுடன் சோபாவில் அமர்ந்து இருப்பது போல புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா சங்கர் பதிவிட்டார். அந்த படத்தில் வடிவேலு எலி பட கெட்டப்பில் இருக்கிறார்.

இந்த புகைப்படம் எலி பார்ட் 2 படமா அல்லது விளம்பரமா பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வைகைப்புயல் வடிவேலு நடிப்பதற்கான தடை இப்போதுதான் விலகியுள்ளது இப்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.