வசூலை வாரி குவிக்கும் புஷ்பா ...மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?....!!

வசூலை வாரி குவிக்கும் புஷ்பா ...மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?....!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 17 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தப் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு சற்று குறைவாக இருப்பதாக கருத்து எழுந்தது.

அதற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையே காரில் நடைபெறும் ரொமான்ஸ் காட்சியே காரணம் என்று கூறப்பட்டது. 

இதற்கிடையில் இந்த படம் முதல் நாளில்  71 கோடி ரூபாய் வசூலும், இரண்டாவது நாளில் 116 கோடி வசூலித்ததாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் மூன்று நாள் வசூல் 173 கோடியாக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.