இயக்குநர் சிவாவின் இல்லத்திற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்....என்ன பரிசளித்தார் தெரியுமா?...!!

இயக்குநர் சிவாவின் இல்லத்திற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்....என்ன பரிசளித்தார் தெரியுமா?...!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

இந்த படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இதற்கிடையில் அண்ணாத்த படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்றும் இயக்குநர் சிவா ஏற்கனவே இயக்கிய வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை மிக்ஸ் பண்ணி அண்ணாத்த படத்தை உருவாக்கினார்  என ஏகப்பட்ட விமர்சகர்கள்  கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

அதேசமயம் அண்ணாத்த திரைப்படம் விமர்சனங்களையும் கடந்து மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.  மொத்தத்தில் இந்த படம் வசூல் அளவிலும் ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி பெற்ற படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ’

அதுமட்டுமல்லாமல் அண்ணாத்த படத்தின் வெளியீட்டிற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், அனைவரும் அண்ணாத்த படத்தை வெகுவாக ரசித்ததாகவும், குறிப்பாக தனது பேரன் வேத், தன்னை வெகுவாக பாராட்டியதாகவும் ஹூட் ஆப்பின் மூலம் பதிவு செய்திருந்தார்.

இந்தநிலையில் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டிற்கு எதிர்பாராமல் சென்ற ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தியதோடு, இயக்குனர் சிவாவுக்கு தங்க செயின் பரிசளித்து உள்ளார் என்றும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடிகர் ரஜினிகாந்த் சிவாவுடன் உரையாற்றி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.