அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்... வலிமை பட பாடல் இந்த தேதியில் வெளியாகுது!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்... வலிமை பட பாடல் இந்த தேதியில் வெளியாகுது!

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் கவர்ந்தது. தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். தற்போது வலிமை படத்தின் அடுத்த அப்டேட் ஆன படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி தற்போது கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான தல அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த 29வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.