என் பெயர் என்ன தெரியுமா...? சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ....இணையத்தில் செம வைரல்

என் பெயர் என்ன தெரியுமா...? சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ....இணையத்தில் செம வைரல்

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் சமந்தா, என்னுடைய பெயர் என்ன தெரியுமா? என்று வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னணி நடிகையாக திகழும் சமந்தா சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில்  அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருவார். அவர் வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாகும். அந்த வகையில் நடிகை சமந்தா சமந்தா தான் இதுவரை நடித்த திரைப்படங்களின் கேரக்டர்களின் பெயர்களை கொண்டு ஒரு கியூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நடித்த கேரக்டர்களான ஜெஸ்ஸி, பிந்து, மதுரவாணி, ராஜி, பேபி, ராமலட்சுமி, தாரா, நித்யா, மித்ரா, ரச்சனா, அனுசுயா, வேம்பு ஆகிய கேரக்டரில் நான் நடித்திருப்பதால், என்னுடைய பெயர் சமந்தாவாக இருந்தாலும், பலர் என்னை இந்த கேரக்டர்களின் பெயரை கொண்டுதான் அழைத்து வருகின்றனர் என்று பதிவு செய்து உள்ளார். சமந்தா பதிவிட்ட இந்த கியூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பேசப்படுகிறது.