வெளியானது "யாரும் பார்க்காத நேரம்"; மகத்-தின் ஃபர்ஸ்டு சிங்கிளை வெளியிட்ட ஆத்மன்:

வெளியானது "யாரும் பார்க்காத நேரம்"; மகத்-தின் ஃபர்ஸ்டு சிங்கிளை வெளியிட்ட ஆத்மன்:

ஆத்மன் சிலம்பரசனின் ஆறுயிர் நண்பனான மகத் தற்போது ஆஹா என்ற தனியார் செயலியில் ஒரு வெப்சீரியஸ் நடித்துள்ளார். “இமோஜி” என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரியசை, ஷேன் எஸ். ரங்கசாமி இயக்கியிருக்கிறார்.

மகத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானஸா சௌதிரி ஆஷிக் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்சீரியஸ் வெளியாக தயாராகும் நிலையில், அதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. சனத் பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்த பாடலை, எழுதி, பாடியிருக்கிறார் கிருஷ்ணா.

ஏ.எம். சம்பத் குமார்-இன் ரமணா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இந்த வெப் சீரியஸ் உருவாகியுள்ளது. யாரும் பார்க்காத நேரம் என்று தொடங்கும் இந்த பாடல், ஆத்மன் சிலம்பரசன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.