5 மொழிகளில் தயாராகும் சன்னிலியோனின் முதல் தமிழ் படம்..!!

5 மொழிகளில் தயாராகும் சன்னிலியோனின் முதல் தமிழ் படம்..!!

பிரபல நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படத்தின் நாயகியான நடிகை சன்னிலியோன் மற்றும் இயக்குனர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன், “ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் படம். இப்படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது என்றார்.