வெளியானது பாஜக தலைவர் நடித்த படத்தின் டீசர்..! டைட்டில் கார்ட்டில் அண்ணாமலையின் பெயர் என்னன்னு தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த  ‘அரபி’  என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

வெளியானது பாஜக தலைவர்  நடித்த படத்தின் டீசர்..! டைட்டில் கார்ட்டில் அண்ணாமலையின் பெயர் என்னன்னு தெரியுமா?

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘அரபி’ என்ற கன்னட திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீச்சல் வீரருக்கு  பயிற்சியாளராக ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இந்த கேரக்டரில் நடிப்பதற்கு அண்ணாமலை ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக்கொண்டதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அத்துடன் கே.எஸ்.விஸ்வாஸ் என்பவர் நீச்சல் வீரராக நடித்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் ஒன்றரை நிமிடம் மட்டுமே வரும் டீசரில் ஒரு சில காட்சிகளில் அண்ணாமலை தோன்றுகிறார். முதலில் பைக்கில் வருகிறார். அடுத்ததாக நீச்சல் பயிற்சியாளராக தோன்றுகிறார்.

இப்படி ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் அண்ணாமலைக்கு, படக்குழுவினர் முதல் முறையாக வெள்ளித்திரையில் அண்ணாமலை என்று டைட்டில் கார்டு போடுவதுடன், அவருக்கு ‘சிங்கம்’ என்ற பட்டத்தையும் கொடுத்து ‘சிங்கம் அண்ணாமலை ஐபிஎஸ்’ என்று டைட்டிலில் பதிவு செய்துள்ளனர். இந்த டீசர் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.