எளிமை மனிதன் கக்கன் வாழ்க்கை வரலாறு படம் இன்று வெளியாகியுள்ளது...!

எளிமை மனிதன் கக்கன் வாழ்க்கை வரலாறு படம் இன்று வெளியாகியுள்ளது...!

விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகியுள்ளது. 

கக்கன் பட வெளியீட்டை சென்னையில் காங்கிரஸ் தொண்டர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் தாரை தப்பட்டை உடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சுதந்திர போராட்ட வீரரும் எளிமைக்கு பெயர் போன மனிதர் கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி உள்ளது.  பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கிய படம் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் படம் வெளியாகி இருந்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் அண்ணாசாலையில் மேள தாளங்கள் உடன் ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து பட வெளியீட்டை கொண்டாடினர்.

அரிதினும் அரிதான அரசியல் தலைவர்... கக்கன் நினைவு தின பகிர்வு ! | Kakkan:  Great leader of Tamilnadu and humble soul - Vikatan

பின் 300 நபர்கள் ஒரே திரையரங்கில் காங்கிரஸ் நிர்வாகியின் ஏற்பாட்டில் இலவசமாக கக்கன் திரைப்படம் பார்த்தனர்.

இதையும் படிக்க   | நடிகை சித்ராவின் மரண வழக்கு: 6 மாதம் கெடு விதித்தது நீதிமன்றம்!