‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர்...! வெளியாகும் தேதியை அறிவித்தது ZEE 5..!

‘தமிழரசன்’  திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர்...! வெளியாகும் தேதியை அறிவித்தது  ZEE 5..!

தமிழில்  வெளியாக  இருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ' தமிழரசன் ' திரைப்படத்தின், உலக டிஜிட்டல் பிரீமியர்  வரும்  ஜூன் 16, 2023 அன்று வெளிவரும் என ZEE5 அறிவித்துள்ளது. 

SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பாக  எஸ். கௌசல்யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். மேலும்,  விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள  ‘தமிழரசன்’  திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும்  என ZEE5 அறிவித்துள்ளது. 

படத்தின் கதாநாயகனான தமிழரசன் ( விஜய் ஆன்டனி ) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்.  அவரது மனைவி லீனா ( (ரம்யா நம்பீசன் ).  இருவரும், தங்களது மகனுக்கு இருதயம் பலவீனமாக இருப்பதையும் அதற்கு உடனடியாக மாற்று இருதய அறுவை சிகிச்சை செய்தால்  மட்டுமே தங்கள் மகனை காப்பாற்ற முடியும் என்பதை  அறிந்ததும் அதிர்ச்சியடைகின்றனர். 

உடனே தங்கள் மகனை ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.  துரதிர்ஷ்டவசமாக அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் இலாப நோக்கத்தில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்க, அந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு அமைச்சருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும்பொருட்டு தமிழரசனின் மகனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இதையறிந்த தமிழரசன் தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  அந்த மருத்துவமனையின்  இதய நிபுணர் டாக்டர் முருகானந்தத்தை (சுரேஷ் கோபி) பிணை கைதியாக பிடித்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அவரால் தனது மகனைக் காப்பாற்ற முடியுமா ?, குறிப்பாக அவரது ஊழல் உயர் அதிகாரி ராணா பிரதாப் சிங் (சோனு சூத்), இவரை வெல்ல விடுவாரா?  என்பது மீதி கதை.

ஒரு தந்தையாக தனது மகனுக்காக என்னவெல்லாம் செய்கிறார்..? இறுதியாக தனது பாசப்போராட்டத்தால் மகனின் வாழ்வை மீட்டெடுப்பாரா...? என்பதை மிக சுவாரஸ்யமாக கதைக்களமாகி கொடுத்திருக்கிறார் இயக்குனர். ' தமிழரசன் ' திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.  ஒளிப்பதிவு ஆர்டி ராஜசேகர் மற்றும் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் சாயா சிங், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இதில் அறிமுகமாகிறார். ஏப்ரலில்  திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, தமிழரசன் திரைப்படம் 16 ஜூன் 2023 அன்று ZEE5-இல் உலக டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகி வருகிறது.  மேலும்  ஆக்சன் த்ரில்லரான இந்த திரைப்படம்  தேசிய அளவில், 12 ஜூன் 2023  வெளியாகும் எனவும்,  இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு OTTதளமான ZEE5, ‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும்  எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் நாயகன் கோவை முருகானந்தத்துக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக்கா?...

 ' தமிழரசன் ' திரைப்படம் குறித்து, அதன் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “விஜய் ஆண்டனி மற்றும் தமிழரசன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்கள் என் கருத்துரு மேல் நம்பிக்கை கொண்டு தங்கள் அனைத்து திறமையையும் வெளிக்காட்டினர். எங்களது இந்த உணர்வுப் பூர்வமான திரைப்படம் ZEE5-இல் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.” என்றார்.

அதனைத்தொடர்ந்து, இந்த் திரைப்படத்தின் கதாநாயகரான  நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இயக்குநரின் கருத்துரு அளித்த நம்பிக்கை என்னை இப்படத்தில் இணைத்தது. அச்சத்தை ஏற்படுத்தும் சமூகத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் காட்சிகளை தமிழரசன் இதில் இணைத்துள்ளார், மேலும் இந்தப் படம் வலுவான செய்தியை வழங்குவதில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் வெளியானாலும், இந்தப் படத்தைப் பற்றி அறியாதோர் அல்லது காணாதோர் இன்னும் பலர் இருக்கிறார்கள். தமிழரசன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான கதை என்பதால் ஜூன் 16 ஆம் தேதி ZEE5 இல் பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.” என்றார்.
 

 இதையும் படிக்க      |  "2100ல் சென்னையின் 16% பகுதிகள் கடலில் முழ்கும்" அதிர்ச்சி தரும் காலநிலை அறிக்கை வெளியீடு!