இதுவும் கடந்து போகும்... தோல் நோயுடன் அவதிப்படும் நடிகை சமந்தா...

நடிகை சமந்தா, தனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக தனது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுவும் கடந்து போகும்... தோல் நோயுடன் அவதிப்படும் நடிகை சமந்தா...

சமீபத்தில் தனது தோல் நோய் காரணமாக பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நடிகை சமந்தா, தற்போது தனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சோசியல் மீடியாவில்  பதிவிட்ட சமந்தா, “யசோதா டிரெய்லருக்கு உங்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.  உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.

மேலும் படிக்க | மீண்டும் லைகாவுடன் இணையும் தலைவர்... அதுவும் இரண்டு படங்களாம்...

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் தசை தொடர்பான  நோய் இருப்பது கண்டறியப்பட்டது.  குணமடைந்து வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறிது காலம் எடுக்கும். 

இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வது நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒன்று.  நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் உண்டு.

மேலும் படிக்க | வேறொரு பெண்ணுடன் இருந்ததால் ஆத்திரம்...தடுத்த மனைவி மீது கார் ஏற்றிய பிரபல தயாரிப்பாளர் கைது!

உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும் போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது.  நான் குணமடைய இன்னும் ஒரு நாள் தேவை  என்று தான் அர்த்தம் என்று நினைக்கிறேன்.”

இந்த பதிவு, தென்னிந்திய திரையுலகையே உலுக்கியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, தற்போது தனது நோய் குற்த்து வெளியிட்ட தகவலை அடுத்து, அவர் விரைவாக குணமடைய அனைவரும் பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்