100 கோடி வசூல்.. 5-வது நாளில் வலிமை படத்தின் நிலைமை.? சைலண்டான போனி!!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தின் வசூல் முதல் வாரத்தில் மின்னல் வேகத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை முதல் வசூல் அதிரடியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடி வசூல்.. 5-வது நாளில் வலிமை படத்தின் நிலைமை.? சைலண்டான போனி!!

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ஆக்க்ஷன் மற்றும் பாசம் கலந்து அசத்தலாக வெளியான படம் தான் "வலிமை".. இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என சமூக ஊடங்களில் செய்திகள் வெளியானது.. மேலும் படத்தின் பிற்பகுதி மிகவும் மெதுவாக செல்வதாவும், போர் அடிப்பதாகவும் எதிர்மறை கருத்து வெளியானது. நீண்ட நேரம் சண்டை காட்சிகள் என படத்தை செல்வதாகவும்,  கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் இருப்பதால் சலிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அஜித் திரைக்கு வந்தாலே போதும் என அஜித் ரசிகர்கள் கூறி வரும் நிலையில் இப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் 14 நிமிட காட்சிகளை படக்குழு குறைத்துள்ளது. இந்நிலையில் 5வது நாள் வலிமை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படம் முதல் நாள் வசூல் 36.12 கோடி ரூபாய் அடித்து தமிழ் சினிமாவில் இதுவரை செய்திருந்த சாதனையை முறியடித்தது. இரண்டாவது நாளில் 24.62 கோடியும், மூன்றாவது நாளில் 23 கோடியும், 4வது ஞாயிற்றுக்கிழமை 30 கோடியும் வசூலித்துள்ளது.

இந்நிலையில், வலிமை படத்தின் நேற்றைய (திங்கட்கிழமை) வசூல் வெறும் 10 கோடி ருபையாக குறைந்துள்ளது. ஆலியா பட்டின் பாலிவுட் திரைப்படமான கங்குபாய் கத்தியவாடி படத்தின் முதல் நாள் வசூலே 10 கோடி என்பதால், வார இறுதியில் இந்த வசூல் நல்லது தான் என டிராக்கர்கள் கூறி வருகின்றனர்.

இதுவரை வலிமை திரைப்படம் தமிழ்நாடு அளவில் 113 கோடியும், உலகளவில் 140 முதல் 150 கோடியும் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை படத்தின் வசூல் எவ்வளவு என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.சமீபத்தில் வெளியான புஷ்பா, மாநாடு உள்ளிட்ட படங்களில் வசூலை அதன் தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், போனி கபூரும் வலிமை திரைப்படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.