பிரபல நடிகை மகளுடன் நடத்திய போட்டோஷூட்...இணையத்தில் செம வைரல்...!

பிரபல நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா இருவரும் இணைந்து நடத்திய போட்டோஷூட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை மகளுடன்  நடத்திய போட்டோஷூட்...இணையத்தில் செம வைரல்...!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகை மீனா, முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அதன்பின் இளம் கதாநாயகியாக  வலம் வந்த நடிகை மீனா தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். 

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தன் நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார்.

அவரை தொடர்ந்து, நடிகை மீனாவின் மகள் நைனிகா, கடந்த 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மீனா மற்றும் அவரது மகள் நைனிகா இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அவர்களின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.