பிரபாஸுக்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா ?

தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வரும் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸுக்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா ?

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்தியளவில் பலராலும் அறியப்படும் நடிகரானார். இவர் ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது 25 ஆவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஸ்பீரிட் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல இந்தி பட நடிகையான கரினா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவரும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகார்வபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.