விஜய் சேதுபதி அளவுக்கு இல்லை!!!- ஹ்ரிதிகை குறை சொல்லும் ரசிகர்கள்!

ஹ்ரிதிக் ரோஷன், சைஃப் அலிகான் நடிப்பில் தயாராகி வரும் விக்ரம் வேதா படத்தின் டீசர் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

விஜய் சேதுபதி அளவுக்கு இல்லை!!!- ஹ்ரிதிகை குறை சொல்லும் ரசிகர்கள்!

பிரபல சிறுகதைக் கதாபாத்திரங்களான விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளத்தை கருவாக வைத்து, இன்றைய காலத்திற்கு ஏற்றது போல விறு விறுப்பான கதையமைப்பில், கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் தான் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான இந்த தமிழ் படம், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட பிரபலமானது. இரண்டு வித்தியாசமான திரைக்கதைகளை ஒன்று சேர்த்து, கேள்வி பதில் என தொடரும் இந்த கதையானது மக்கள் மத்தியில் பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் படிக்க | இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! சைப் அலிகானின் முதல் தோற்றத்தை வெளியிட்டது படக்குழு.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், வை நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. தியேட்டர்களில் வெளியான இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த கதையை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்தனர் படக்குழுவினர். மேலும், அதே படக்குழுவினரோடு ஒஇந்தியில் களமிறங்க முடிவு செய்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படபிடிப்பு துவங்கியது.

மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்திற்கு சைஃப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்திற்கு ஹிரிதிக் ரோஷனும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பாலிவுட் ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது. மேலும், படபிடிப்பில் எடுத்த போட்டோக்கள் இணையத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, எப்போது படம் வெளியாகும் என ஆவலுடன் காத்து வந்தனர் ரசிகர்கள்.

மேலும் படிக்க | ஷாருக்கான் தான் முக்கியமாம்..அல்லுக்கு ஷாக்..புஷ்பா 2-ல் இருந்து விலக என்ன காரணம்?

இந்நிலையில்,  தற்போது, படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதே பயங்கரமான பிஜிஎம்-முடன் திரையை தெரிக்க விடும் காட்சியமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்காக, ரசிகர்கள் படு ஆர்வத்தோடு காத்து வருவதாக அனைவரும் கமெண்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலரோ, இந்த டீசர் மூலம், தங்களின் எதிர்பார்ப்பு நோகடிக்கப்பட்டதாக பதிவிட்டு வருகின்றனர். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக எதார்த்தமான மற்றும் நம்பக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஹிரிதிக் ரோஷன் இதனை ட்ராமா போல நடித்து கதையின் தாக்கத்தையே குறைத்து விட்டதாகவும் கமெண்ட் செய்து தங்களது வருத்தங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிரடியாக உருவாகி வரும் இந்தி விக்ரம் வேதா!!...லக்னோவில் தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு...!!

சமீபத்தில், கொரோனா காலம் வந்ததில் இருந்து, பாலிவுட்டின் மவுசு அப்படியே குறைந்த நிலையில், படத்தின் மீதான ஆர்வமும் அறிவும், உலகளவில் விரிவடைந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி படுத்த முடியாத நிலையில் தவிக்கும் பாலிவுட், தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங் உரிமம் மற்றும், ரீமேக் உரிமங்களை வைத்து மட்டுமே காலத்தை ஓட்டுவதாக பல குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் முன்வைத்து வந்தனர்.

மேலும், சமீப காலமாக, பாய்காட் பாலிவுட் என்பதனை பரப்பி வரும் நெட்டிசன்கள், தமிழ் படமான விக்ரம் வேதா பார்த்து மெய்சிலிர்த்ததாகவும், இந்தி விக்ரம் வேதா, தங்களை வருத்தம் அடைய வைப்பதாகவும் வருந்தி பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, நேசுரலாக நடித்திருந்த விஜய் சேதுபதி அளவிற்கு ஹிரிதிக் ரோஷனால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றும் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். இது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.