ஹீரோயின் ரோலுக்கு டாட்டாவா..? 3 படங்களில் தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

ஹீரோயின் ரோலுக்கு டாட்டாவா..? 3 படங்களில் தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படம் மூலமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து இளைஞர்களின் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட் லக் சகி’, தமிழில் ’சாணிக்காயிதம், ‘அண்ணாத்த’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தங்கை கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி அஜித் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளாராம். இத்துடன் முடிந்து விடவில்லை. மூன்றாவதாக இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணிக்காயிதம் படத்திலும் செல்வராகவனுக்கு தங்கையாகவே கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகையாக இருக்கும் சமயத்தில் இவ்வாறு தொடர்ந்து மூன்று படங்களில் தங்கையாக நடித்தால் இவரது மார்க்கெட் குறைந்து விடாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.