’தல 61'-ல் இணையும் இசையமைப்பாளர்..! யுவன் சங்கர் ராஜாவை ஒதுக்கிய படக்குழு..!

தல அஜித் படத்தில் முதன் முறையாக இணையும் ஜிப்ரான்..!

’தல 61'-ல் இணையும் இசையமைப்பாளர்..! யுவன் சங்கர் ராஜாவை ஒதுக்கிய படக்குழு..!

அஜித்தின் 60-வது படமாக, பல இக்கட்டான சூழல்களுக்கு மத்தியில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'வலிமை'. இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தல-யின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தல-யின் 61-வது படத்தையும் எச்.வினோத் இயக்கவிருக்கும் நிலையில், இப்படத்திற்கு 'ஜிப்ரான்' இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் இணைந்திருந்த அஜித்-எச்.வினோத்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி, தல 61 படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கூட்டணி முறிந்து தற்போது யுவனுக்கு பதிலாக ஜிப்ரான் இணைக்கப்பட்டுள்ளார். 'வாகை சூடவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். தொடர்ந்து பாபநாசம், கடாரம் கொண்டான், ராட்சசன், மாறா போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் ஜிப்ரான். இவர் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். ஜிப்ரான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.