தலைமறைவான கார்த்திக் சுப்புராஜ்... வேறு இயக்குனரை மாற்றிய ரஜினி!! 

தலைமறைவான கார்த்திக் சுப்புராஜ்... வேறு இயக்குனரை மாற்றிய ரஜினி!! 

ஜகமே தந்திரம் படம் பிளாப் ஆனதால் ரஜினி பட வாய்ப்பை இழந்தார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை இயக்கும் இந்த வாய்ப்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு சென்றுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

2006ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் - சோனியா அகர்வால் நடித்த திருட்டுப்பயலே படத்தின் மூலம் படத் தயாரிப்பைத் தொடங்கியது. தனிஒருவன், மாற்றான், அனேகன், கவண், பிகில் உள்ளிட்ட படங்களை தயாரித்த இந்த நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்தே படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த். அடுத்து மருமகன் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் எனக் கூறப்பட்டு சொல்லப்பட்டது. நிலையில், அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கும் என சொல்லப்படுகிறது.  
 
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்கிற கேள்விக்கு விடையாகக் கடைசி வரை வந்தவர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இவர்களில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு தேசிங்கு பெரியசாமிக்குக் கிடைத்திருக்கிறது. காரணம் ஜகமே தந்திரம் படத்திற்கான அட்டர் பிளாப் ஆனதால், கார்த்திக் சுப்புராஜை தொடர்புகொள்ள முடியவில்லையாம், அதன் தோல்வி கார்த்திக் சுப்புராஜ் தேர்வாகாமல் போனதாக சொல்லப்படுகிறது.