அண்ணாத்த ரஜினிக்கு 70 வயசு... அவங்க ஆயாவுக்கு 67 வயசு.. விளாசும் நெட்டிசன்ஸ்

ரஜினிக்கு பாட்டியாக நடித்த குலப்புல்லி லீலாவுக்கு உண்மையான வயது  67 எனவும் , சூப்பர் ஸ்டாருக்கு 70 வயது எனவும் நெட்சன்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்ணாத்த படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்த பெரியாத்தா என்கிற கதாபாத்திரத்தில் குலப்புல்லி லீலா நடித்திருந்தார். ரஜினிக்கு பாட்டியாக நடித்த குலப்புல்லி லீலாவுக்கு உண்மையான வயது  67 எனவும் , ரஜினிக்கு 70 வயது எனவும் நெட்சன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த இவர் பல்வேறு மலையாளப் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 26 வருடங்களுக்கு முன்பு கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தில் குலப்புல்லி லீலா ஒரு சின்ன காட்சியில் மட்டும் வந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.