7 விருதுகளை தட்டி தூக்கிய ‘சூரரைப் போற்று... எதற்கு எதற்கு தெரியுமா.?

7 விருதுகளை தட்டி தூக்கிய  ‘சூரரைப் போற்று... எதற்கு எதற்கு தெரியுமா.?

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த விருது விழாவில் தமிழ் படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை குவித்து வருகின்றன. சூரறைபோற்று படம் மட்டும் சுமார் 7 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. 

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு மத்தியில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அந்த வகையில், தற்போது சைமா விருதில் 7 விருதுகளை வென்றுள்ளது.

அதன்படி, 2020 ஆம் ஆண்டு சிறந்த நடிகராக சூரரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவும், சிறந்த திரைப்படமாக சூரரைப்போற்று படமும், சிறந்த இயக்குனராக சுதா கொங்கராவும், சிறந்த நடிகையாக அபர்ணா முரளியும், சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷும், சிறந்த ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மியும், சிறந்த பாடகராக வெய்யோன் சில்லி பாடலை பாடிய ஹரிஷ்யும் உள்ளிட்ட 7 விருதுகளை சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது.