லாபம் படத்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்.. வசூல் விவரம் இதோ

லாபம் படத்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்.. வசூல் விவரம் இதோ

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. 

பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்து ஏராளமான படங்களில் ஒப்பந்தமானார். அதேபோல் இந்த படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன.

தொடர்ந்து வெற்றி படங்களாக வழங்கி வந்த விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக உயர்ந்தார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. 

மிகவும் குறுகிய காலத்தில் அதிக படங்கள் நடித்தவர் என்ற பெருமை இருந்தாலும் தொடர் தோல்வியை வழங்கி வருகிறார் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று ஏதாவது ஒரு படமாவது ஹிட்டாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றுமே டக் அவுட் ஆனது. 

தற்போது லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சம்பளம் 10 கோடி எனவும் ஹீரோயின் ஸ்ருதிஹாசனுக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பட்ஜெட் 21 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் படத்தின் தயாரித்த தயாரிப்பாளர் டிஜிட்டல் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் உட்பட 22 கோடிக்கு படத்தை விற்றுள்ளார். இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளருக்கு 1 கோடி பக்கம் லாபம் கிடைத்துள்ளது. 

ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்குமே லாபம் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இதன் மூலம் லாபம் திரைப்படம் லாபம் கொடுக்காமல் நஷ்டம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.