அதிரடி சலுகைகளுடன் ஆடித் தள்ளுபடி; அதிகாலையிலே திரண்ட தாய்குலங்கள்!

அதிரடி சலுகைகளுடன் ஆடித் தள்ளுபடி; அதிகாலையிலே திரண்ட தாய்குலங்கள்!

காரைக்குடியில் ஆடித்தள்ளுபடி விற்பனையில் பட்டுப்புடவை வாங்க அதிகாலை முதலே குடும்பத்துடன் பெண்கள் குவிந்துள்ளனர்.
 
ஆடி மாதத்தில் பொதுவாகவே வீடுகளில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைவு. இதனால் வருடம் முழுவதும் உள்ள பழைய இருப்பு ஜவுளிகளை வந்த விலைக்கு தள்ளுபடி என்கிற பெயரில் துணிக்கடைகள் விற்பனை செய்து வருகின்றன. பழைய ஸடாக்குகளை விற்றால்தான் புதிய  ஜவுளிகளை மக்கள் பார்வைக்கு வைக்க முடியும் என்பதால் ஒவ்வொரு வருட ஆடி மாதம் முதல் நாள் அனைத்து ஜவுளிக்கடைகளிலும் போட்டி போட்டு தள்ளுபடி விற்பனை அறிவிப்பது வழக்கம்.

இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  உள்ள ஆர்.எம்.ஆர் ஜவுளிக்கடை சார்பில் திருமண மண்டபத்தில் ஆடி முதல் தேதி மட்டும் பட்டுப்புடவைகளுக்கு 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து துணிகளை வாங்க சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் மக்கள் திரண்டனர். இதற்காக அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து தயாரான பெண்கள் 5 மணிக்கெல்லாம் கடை முன்பு குடும்பத்துடன் குவியத் தொடங்கினர். கடையை திறந்ததும் முண்டியடித்துக்கொண்டு கடைக்குள் சென்று ஆடித் தள்ளுபடியில் உடைகளை வாங்கியுள்ளனர் நம் தாய்குலங்கள்.

இதையும் படிக்க:பேனா நினைவு சின்னம்; திரும்பப் பெறுகிறதா தமிழ்நாடு அரசு?