இடி விழுந்து 10 மாணவர்கள் பரிதாப நிலை! ஒடிசா மழையால் நடந்த கொடூரம்!!!

ஒடிசாவில் தொடர் மழை நிலவி வர, 17 தொடக்கப்பள்ளி மாணவர்கள் இருந்த வகுப்பில் இடி விழுந்து, 10 மாணவர்கள் வரை பரிதாப நிலையில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடி விழுந்து 10 மாணவர்கள் பரிதாப நிலை! ஒடிசா மழையால் நடந்த கொடூரம்!!!

ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மோசமான வானிலைக்கு மத்தியில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 மாணவர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிகிறது.

திலீபானி தொகுதிக்கு உட்பட்ட புத்தரபாசி தொடக்கப்பள்ளியில் 17 மாணவர்கள் வகுப்பில் இருந்தபோது, மின்னல் தாக்கியது. அதில் குறைந்தது 10 பேர் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்னலின் தாக்கத்தால் மேற்கூரையில் ஓட்டை ஏற்பட்டு வகுப்பறையின் தரையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தியோகர் மாவட்ட கல்வி அதிகாரி சச்சிதானந்த் பெஹெரா, மின்னல் தாக்கியபோது கனமழை பெய்ததாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “நாங்கள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்தோம், 10 மாணவர்களும் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  நான்கு மாணவர்களின் கை கால்கள் சரியாக செயல்படாததால், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என்று கூறினார்.

காயமடைந்த குழந்தைகள் அனைவரும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கட்டாக்கில் 55 வயதான விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்தபோது மின்னல் தாக்கி இறந்தார். அவரை அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தொடர் துர்சம்பவங்களால், அப்பகுதியில், பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.