400 ஆண்டுகளுக்கு பழைமையான களிமண் பட்டாசுகள்.. வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

குஜராத் மாநிலத்தில், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத 400 ஆண்டுகள் பழைமையான  களிமண் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

400 ஆண்டுகளுக்கு பழைமையான களிமண் பட்டாசுகள்.. வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைக்கட்ட தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கு பின் மக்கள் ஆர்வமுடன் வெளிவந்து பண்டிகைக்கு தேவையானவற்றை வாங்கி வருகின்றன.

ஆனால் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஒடிசா மாநிலங்களில் பட்டாசுக்கு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களில் நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குஜராத்தின் வதோதராவில், தீபாவளியை முன்னிட்டு, 400 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட களிமண் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த பட்டாசால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும், குறைந்த அளவிலான சத்தம்,  வெடித்த பின்பு களிமண் கரைந்து விடும் என்பதால், அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.