6 யூடியூப் சேனல்கள் திடீர் முடக்கம்...மத்திய அரசு அதிரடி நடவடிக்கை...!

6 யூடியூப் சேனல்கள் திடீர் முடக்கம்...மத்திய அரசு அதிரடி நடவடிக்கை...!

பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கம் செய்துள்ளது.  

6 யூடியூப் தளங்கள் மீது புகார் :

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நடைமுறைகள், அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் தளங்கள் மீது புகார்கள் எழுந்தன. 

விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழுவினர் :

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். 

இதையும் படிக்க : தமிழகத்தில் பாஜக போன்ற சனாதன சக்திகளுக்கு...2019 நாடாளுமன்றத் தேர்தல் சுட்டிக்காட்டியது என்ன?

விசாரணையில், மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகள் பற்றியும் பொய்யான செய்திகளை 6 யூடியூப் சேனல்கள் பரப்பி வந்தது தெரியவந்தது. இந்த யூடியூப் சேனல்கள் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் 51 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதிரடியாக முடக்கம் :

இதனை தொடர்ந்து, அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களை பரப்பிய ஆறு யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.