ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம், தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம், தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட மத்திய  அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த அனுராக் தாக்கூர், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை, தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படையினர் தவிர, மற்ற தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன்மூலம் கெஜட்டில் இல்லாத சுமார் 11 லட்சத்து 56 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.