பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஒட்டி பிறந்த இரட்டையர்கள்...

பெற்றோரால் கைவிடப்பட்ட சோஹ்னா மற்றும் மோஹ்னா ஒட்டி பிறந்த இரட்டையர்களான இருவருக்கும் பஞ்சாப் மின்வாரியத்தில் அரசு வேலையை வழங்கியுள்ளது.இதற்கு இரட்டையர்களான இருவரும் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஒட்டி பிறந்த இரட்டையர்கள்...

இவர்கள் இருவரும் அமிர்தரஸில் பிறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரட்டையர்களாக பிறந்த இவர்களை பெற்றோர்கள் கைவிட்டதாக கூறப்படுகிறது. 19 வயதான இருவருக்கும் அரசு தரப்பில் வேலை வழங்கப்பட்டுள்ளது.பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் முதல் வேலையை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.கடந்த டிசம்பர் 20 அன்று இருவரும் பணியில் சேர்ந்ததாக கூறுகின்றனர்.

ஓட்டி பிறந்த இரட்டையர்களான இருவரையும் பெற்றோர்கள் கைவிட்ட போதிலும்  ஐ.டி.ஐ.யில் டிப்ளமோ வரை இவர்கள் படித்துள்ளனர்.இவர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 20 ஆயிரம் என பஞ்சாப் அரசு மின்வாரியத்தில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அரசு வேலை வழங்கியதற்காக பஞ்சாப் அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் “நாங்கள் வேலையை பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் வேலையை வழங்கிய அரசிற்கும் எங்களை பயிற்றுவித்த பிங்கல்வாரா நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என கூறியுள்ளனர்.மேலும் இவர்கள் இருவரும் PSPCL ல் உள்ள விநியோக கட்டுபாடு அறைக்குள் பணியாற்றுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளதாக உள்ளது.

PSPCL இன் துணை மின்நிலைய ஜூனியர்கள் இவர்களை பற்றி கூறுகையில்  சோஹ்னா-மோஹ்னா இருவரும் இணைந்து மின்சாதனங்களை கவனிக்க உதவி வருவதாகவும், இவர்களுக்கு ஏற்கனவே பணி அனுபவம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு இதயங்கள்,கைகள், முதுகெலும்பு முதல் உடல் உறுப்புகள் அனைத்தும் ஜோடியாக உள்ளன.  டெல்லியில் பிறந்தவர்களாக இவர்களை தனித்தனியாக பிரிக்க முயற்ச்சித்தால் அறுவை சிகிச்சையில் ஒருவரை இழக்க நேரிடும் எனவும்  மீதமுள்ள ஒருவருக்கும் உடல் ரீதியாக உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இருவரையும் பிரிப்பதற்கான முடிவில் மருத்துவர்கள் எதிராக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெற்றோர்கள் இவர்களை கைவிட்ட பின்னர்  எய்ம்ஸ் மருத்துவர்கள் அமிர்தசரஸில் உள்ள பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் சோஹ்னா மற்றும் மோஹ்னா என பெயரிடப்பட்டதாகவும் , அந்நிறுவனமே அவர்களை வளர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அரசு பல உதவிகளை இருவருக்கும் செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.