தொடரும் ஒத்திவைப்பு! 4 நாட்களுக்கு பின் கூடிய அவைகள் மீண்டும் 5 ஆம் தேதி வரை...!!

தொடரும் ஒத்திவைப்பு! 4 நாட்களுக்கு பின் கூடிய அவைகள் மீண்டும் 5 ஆம் தேதி வரை...!!

எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டன.


அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்ற பெயரிலேயே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு பேசியது தொடர்பாக ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து வீசியும் அமளியில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், 4 நாட்களுக்குப்பின் நாடாளுமன்றம் இன்று கூடியது. தொடர்ந்து சமீபத்தில் மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இன்னசென்ட், கிரிஷ் பாபட் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய நிலையில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவது மற்றும் ராகுல்காந்தி பதவி நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக கருப்பு உடையணிந்து சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்பிக்கள் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாளை மறுநாள் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க : ஈபிஎஸ் வீட்டுக்கு தடபுடலாக வந்த சீர்வரிசை...மாஸ் காட்டிய விஜயபாஸ்கர்...!

அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் கருப்பு உடையணிந்து சென்று அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார். மீண்டும் அவை கூடிய நிலையில், 2023ம் ஆண்டிற்கான போட்டி திருத்த மசோதா, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஒருசில நிமிடங்களிலேயே 5ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.