வெளியுறவுக் கொள்கையில் பாஜக அரசு தோல்வி... இந்திய எல்லையில் சீனா ஊடுருவிட்டது - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

வெளியுறவுக் கொள்கையில் பாஜக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் இந்திய எல்லையில் சீனா ஊடுருவியிருப்பதாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விமர்சித்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கையில் பாஜக அரசு தோல்வி... இந்திய எல்லையில் சீனா  ஊடுருவிட்டது - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

பஞ்சாப் தேர்தலையொட்டி அம்மாநில மக்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட நல்ல பணிகளை மக்கள் நினைத்துப்பார்ப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை வைத்து பஞ்சாப் முதலமைச்சர் மீதும் பஞ்சாப் மக்கள் மீதும் குற்றம் சுமத்த பாஜகவினர் முயல்வதாக தெரிவித்த அவர், பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாஜக அரசுக்கு பொருளாதார கொள்கைகள் புரியவில்லை என்று குற்றம்சாட்டிய மன்மோகன்சிங், வெளியுறவுக் கொள்கையில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்திய எல்லையில் சீனா ஊடுருவியிருப்பதாகவும், வெள்ளையர்கள் கையாண்ட பிரித்தாலும் கொள்கையை பாஜக பின்பற்றிவருவதாகவும் மன்மோகன்சிங் குற்றம்சாட்டினார்.