4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் - மத்திய அமைச்சர் தகவல்  

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் - மத்திய அமைச்சர் தகவல்   

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்கனவே 4ஜி சேவையை தொடங்கியுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி சிம் வழங்கி வருகிறது. இதுவே இந்தியாவின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் ஆகும்.

இந்நிலையில், 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கியதாகவும், சேவையின் முதல் அழைப்பில் தாம் பேசியதாகவும், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டம் நிறைவேறத் தொடங்கியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Made first call over Indian 4G network of BSNL (Designed and Made in India).
PM @narendramodi Ji’s vision of Aatmanirbhar Bharat taking shape.

— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 10, 2021 ">