இருமாநில தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக...!

இருமாநில தேர்தல்:  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக...!

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே மத்தியப்பிரதேச, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தடுத்த தேர்தல் நடைபெறுகின்றன.

இந்நிலையில் 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் 21 வேட்பாளர்களையும், 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 39 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 5 பெண்கள் - 11 பட்டியல் பழங்குடிகளும், மத்தியப்பிரதேசத்தில் 5 பெண்கள் - 13 பழங்குடியினரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   |  ஒரு சீட்டுக்கு இவ்வளவு அக்கப்போரா!