எங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடியுமா? எதிர்கட்சியினருக்கு அமித்ஷா சவால்...

அரசின் கொள்கைகளை விமா்சிக்கும் எதிர்கட்சிகளால் எங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடியுமா? என உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

எங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடியுமா? எதிர்கட்சியினருக்கு அமித்ஷா சவால்...

சன்சத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா,  கட்சியிலும், ஆட்சியிலும் ஒருவா் எந்தப் பதவியில் இருந்தாலும், அவா் தெரிவிக்கும் கருத்து சிறப்பானதாக இருந்தால் அதற்கு மோடி உரிய முக்கியத்துவம் கொடுப்பாா். மற்றவா்களின் கருத்துகளைப் பொறுமையாகக் கேட்டபவா்களில் பிரதமா் நரேந்திர மோடியைப் போல எவரையும் நான் பாா்த்தது இல்லை என கூறினார்.

நாட்டின் நலன் கருதி அரசியல் ரீதியாக துணிவான முடிவுகளை எடுக்க அவா் தயங்கியதே கிடையாது. மக்களின் நலனுக்காக அவா் சில கசப்பான முடிவுகளையும் எடுத்துள்ளாா். அவா் பணியாற்றும் முறையை மிகவும் அருகில் இருந்து பல ஆண்டுகளாகப் பாா்த்து வருபவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். அவா் தனது எந்த முடிவையும் மற்றவா்கள் மீது திணித்ததில்லை.

தேசத்தின் நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் கட்சியில் உள்ளவா்களுக்கு எதிராகவும் அவா் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். நாட்டின் நலனே அனைத்தையும்விட முக்கியம் என்ற நோக்கில் அவா் அளவுக்கு வேறு யாரும் கடினமான முடிவுகளை எடுத்ததில்லை.
கருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள், வரி ஏய்ப்பு தடுப்பு ஆகிய நடவடிக்கைகளின்போது எங்கள் கட்சிக்குப் பல ஆண்டுகளாக வாக்களித்து வந்தவா்கள் பலரும் பாதிக்கப்பட்டனா். ஆனால், தேச நலனுக்காகவே மோடி இந்த நடவடிக்கையை எடுத்தாா் என்பதை அவா்கள் புரிந்து கொண்டனா்.

இப்போதும் மோடியின் ஆதரவாளா்களாகவே உள்ளனா்.எங்கள் ஆட்சியைக் குறை கூறும் எதிா்க்கட்சி நண்பா்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசின் கொள்கைகளை விமா்சிக்கும் அவா்களால், எங்கள் மீது ஏதாவது ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடியுமா? எங்கள் ஆட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை மக்களிடம் அம்பலப்படுத்த எதிா்க்கட்சியினா் தாராளமாக முயற்சிக்கலாம். ஆனால், தரக்குறைவான அரசியல் நிலைப்பாட்டுக்கு வருவதும், தனிப்பட்ட முறையில் விமா்சிப்பதும் கூடாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.