தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதில் மத்திய அரசு மெத்தனம்

நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதில் மத்திய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள இடங்களை ஒரு வாரத்துக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததை அறிந்த நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது ஜனநாயக நாடு எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் மத்திய அரசு விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். தேசிய கம்பெனி சட்ட தீர்பாயம், வருமான வரி மேல்முறையீட்டு தீர்பாயம் போன்றவற்றில் நியமனம் மேற்கொள்ளப்படாததால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.