வெளிநாடுகளில் இந்திய சிரப்பால் குழந்தைகள் இறப்பா....பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறதா காங்கிரஸ்...

இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் இந்திய சிரப்பால் குழந்தைகள் இறப்பா....பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறதா காங்கிரஸ்...

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் இந்திய மருந்து நிறுவனங்களின் சிரப் குடித்ததால் குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் இப்போது அரசியல் பேச தொடங்கியுள்ளனர்.  காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று காலை இந்த பிரச்சினையை எழுப்பி மோடி அரசாங்கத்தை கிண்டல் செய்துள்ளார்.  இந்தியாவை உலகின் 'மருந்தகம்' என்று முன்னிறுத்துவதற்குப் பதிலாக,  இந்த விஷயத்தில் பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  

நடந்தது என்ன?:

இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் கூறியுள்ளது.  இந்த குழந்தைகள் நொய்டாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை உட்கொண்டதாக உஸ்பெக் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த விவகாரத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய சுகாதார அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
 
முன்னதாக ஜூலை மாதம், ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அங்கு, சிறுநீரகக் கோளாறுகளால் குழந்தைகள் நோய்வாய்ப்படத் தொடங்கியதாகவும் சுமார் 70 குழந்தைகள் இறந்த செய்தியும் வெளியாகியது.   'மேட் இன் இந்தியா' சளி மற்றும் இருமல் மருந்தை உட்கொண்ட மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இறந்த குழந்தைகள் சிரப்பை உட்கொள்ளவில்லை என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.   இந்திய ஏஜென்சியும் இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியிருந்தது.

காங்கிரஸ் தலைவர் கூறியதென்ன?:

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிரப் ஆபத்தானதாகத் தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.  மேல முதலில் 70 குழந்தைகள் காம்பியாவில் இறந்தனர். இப்போது 18 குழந்தைகள் உஸ்பெகிஸ்தானில் இறந்துள்ளனர்.  இந்தியா உலகத்துக்கே மருந்தகம் என்று பெருமை பேசுவதை மோடி அரசு நிறுத்த வேண்டும்.  அரசு இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர்கள் என்ன சொன்னார்கள்?:

ஜெய்ராம் ரமேஷின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிரப்புக்கும் காம்பியாவில் குழந்தைகள் இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், “இதை காம்பியன் நிர்வாகம் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு இரண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.  ஆனால், மோடி மீதான கண்மூடித்தனமான வெறுப்பால் காங்கிரஸ், இந்தியாவையும் அதன் தொழில்முனைவோர் உணர்வையும் கேலி செய்கிறது.” எனவும் பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஒய்.சத்ய குமார் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மீதான எதிர்க்கட்சிகளின் அபரிமிதமான வெறுப்பு, தற்போது இந்தியா மீதான வெறுப்பாக மாறியுள்ளது.  ஏற்கனவே இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பும, காம்பியாவும் இந்த விஷயத்தில் இந்திய இருமல் மருந்தைப் பயன்படுத்துவதில் எதுவும் பிரச்சினையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன.  குழந்தைகளின் இறப்பை தவறாக கூறி இந்தியாவை அவதூறு செய்ய நீங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிடாதீர்கள்.” என கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷின் ட்வீட்டில் பாஜக தலைவர் சி.டி.ரவி கூறுகையில், "எல்லாவற்றிலும் பொய் சொல்லும் இந்த பொய்யர்கள் தங்கள் குருக்களின் பாதையில் உள்ளனர்.  காம்பியாவில் குழந்தைகள் இறப்புக்கும் மேட் இன் இந்தியா சிரப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது" என்று கூறியுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமே...” பாஜகவின் கருத்துக்கு பதிலடி கொடுக்குமா காங்கிரஸ் ?!!!