'சத்யமேவ ஜெயதே' வை 'சாஸ்தரமேவ ஜெயதே' என மாற்றிய பாஜகவினர் - கபில் சிபல் குற்றச்சாட்டு !!

'சத்யமேவ ஜெயதே' என்ற இந்திய நாட்டின் முழக்கத்தை, பாஜகவினர்' சாஸ்தரமேவ ஜெயதே' என மாற்றியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

'சத்யமேவ ஜெயதே' வை 'சாஸ்தரமேவ ஜெயதே' என மாற்றிய பாஜகவினர் - கபில் சிபல் குற்றச்சாட்டு !!

அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், ஒரு பக்கம் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வர, மறுபக்கம் பாஜகவினர் தேர்தல் வெற்றிக்கான கடைசி ஆயுதமாக மதத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்கான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான பிரபல மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல்,  'சத்யமேவ ஜெயதே' என்ற இந்திய நாட்டின் முழக்கத்தை, பாஜகவினர் 'சாஸ்தரமேவ ஜெயதே' என மாற்றியுள்ளதாக சாடினார். அதாவது பன்முக தன்மை கொண்ட இந்திய நாட்டின் மீது பாஜகவினர் மத சாயம் பூசுவதை வெளிப்படையாக சாடும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.