தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை.. டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

டெல்லியில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை.. டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

கோடைகாலம் தொடங்கியது முதலே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஜூன் 4 முதல் வெப்பம் கடுமையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வெயில் மிக கடுமையாக இருப்பதால், மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.