இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்  

இந்தியாவிற்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுளள்து.

இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்   

இந்தியாவிற்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுளள்து.

அதன்படி, வரும் 25-ம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுக்கொண்ட நாட்டிலிருந்து, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது இல்லை என்றும், அதே சமயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் அல்லது தடுப்பூசி போடாமல் வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.