தடுப்பூசிக்கு சவால்விடும் டெல்டா பிளஸ்... நிபுணர்கள் எச்சரிக்கை...

நோய் எதிர்ப்புசக்தியை தவிடுபொடியாக்கு பலம் பெற்றவையாக டெல்டா பிளஸ் வகை வைரஸ் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசிக்கு சவால்விடும் டெல்டா பிளஸ்... நிபுணர்கள் எச்சரிக்கை...
கொரோனா தடுப்பூசியால் உண்டான ஆன்டிபாடிகள் மற்றும் தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை தோற்கடிக்கக்கூடிய ஆற்றல் டெல்டா பிளஸ் மாறுபாட்டுக்கு இருப்பதாக பேராசிரியர் ஜமீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தியாவில் 2 ஆம் அலைக்கு காரணமாக டெல்டா மாறுபாடு தற்போது மீண்டும் பிறழ்வடைந்து அதீத வீரியம் கொண்ட டெல்டா பிளஸ் மாறுபாடாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் 3 ஆம் அலை ஏற்படுவதற்கு இதுவே காரணமாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் டெல்டா பிளஸ் மாறுபாடு தடுப்பூசி மற்றும் தொற்று நோய் எதிர்ப்பு சக்தி இரண்டையும் தவிடுபொடியாக்கக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பேராசிரியர் ஷாஹித் ஜமீல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதாவது தடுப்பூசியால் உடலில் உண்டான நோய்யெதிர்ப்பு சக்தி மற்றும் முந்தைய கொரோனா பாதிப்பால் உடலில் உண்டான நோய்யெதிர்ப்பு சக்தி ஆகியவற்றை தவிடுபொடியாக்கி பாதிப்பு ஏற்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.