சட்டவிரோதமாக செயல்படும் 600 டிஜிட்டல் கடன் செயலிகள் - மக்களை உஷார்படுத்தும் ரிசர்வ் வங்கி

சட்டவிரோதமாக செயல்படும் 600 டிஜிட்டல் கடன் ஆப்-களை ரிசர்வ வங்கி அடையாளம் கண்டுள்ளது.

சட்டவிரோதமாக செயல்படும் 600 டிஜிட்டல் கடன் செயலிகள் - மக்களை உஷார்படுத்தும் ரிசர்வ் வங்கி

 ஆன்லைன் வழியாகவே உடனடியாக கடன் வழங்கும் பல ஆப்-கள் இணையத்தில் உலா வருகின்றன. உடனடி கடன், விரைவான கடன் போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகள் மூலம் அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோத டிஜிட்டல் கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், புதிய சட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் இணையத்தில் செயல்பாட்டில் உள்ள ஆயிரத்து 100 டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப்-களை ரிசர்வ வங்கி அடையாளம் கண்டுள்ளது. இதில் 600 ஆப்-கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் ஆண்ட்ராய்டு பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரிசர்வ வங்கி எச்சரித்துள்ளது.