டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி...

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி...

ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பின் பேசிய அவர், "சில்லறை நேரடித் திட்டம்" நாட்டில் உள்ள சிறு முதலீட்டாளர்களுக்கு அரசுப் பத்திரங்களில் எளிய மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கான ஊக்கத்தை  வழங்கியுள்ளது என்றும், ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்துடன் வங்கித் துறையில் ஒரே நாடு, ஒரே குறைதீர்ப்பாளர் என புதியதோர் வடிவம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இன்று தொடங்கப்பட்ட இரண்டு திட்டங்களும் நாட்டில் முதலீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு முதலீட்டாளர்கள் மூலதனச் சந்தைகளை அணுகுவதை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் முடிவுகள் அரசு எடுத்து வரும் பெரிய முடிவுகளின் தாக்கத்தை அதிகரிக்க உதவியுள்ளது என கூறிய பிரதமர், கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் 19 மடங்கு வளர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.