சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் நிலங்களை வாங்கியது எத்தனை பேர் தெரியுமா..?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு 7 நிலங்கள் மட்டுமே வெளி நபர்களால் வாங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீரில் நிலங்களை வாங்கியது எத்தனை பேர் தெரியுமா..?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு இதுவரை 7 நிலங்கள் மட்டுமே வெளி நபர்களால் வாங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப் பட்டதற்கு பிறகு கடந்த 2020 அக்டோபர் மாதம் புதிய நிலச் சட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர்  நிலங்கள் அம்மாநில மக்களுக்கு மட்டுமே என்ற ஏகபோக உரிமை என்பது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது.  

ஜம்மு காஷ்மீர் அல்லாத ஒருவரும் நிலம் வாங்கலாம் என்ற விதிமுறை திருத்தப்பட்ட பிறகு மாநிலத்தின் வளர்ச்சி அதிக அளவில் உயரும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீர் அல்லாத எத்தனை பேர் அங்கு நிலம் வாங்கி இருக்கிறார்கள்? என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் ஒருவர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், ஜம்மு காஷ்மீர் மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி புதிய நில சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாதவர்கள் 7 இடங்களை வாங்கி உள்ளதாகவும், அந்த குறிப்பிட்ட 7 இடங்களும் ஜம்முவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.