”ஊட்டச்சத்தின்மை அல்ல, சைவ உணவு உண்பதன் விளைவே” இந்தியாவின் உலகளாவிய பசி குறியீட்டின் தரவரிசை குறித்த விளக்கம்!!!

”ஊட்டச்சத்தின்மை அல்ல, சைவ உணவு உண்பதன் விளைவே” இந்தியாவின் உலகளாவிய பசி குறியீட்டின் தரவரிசை குறித்த விளக்கம்!!!

உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 121 நாடுகளில் 107 வது இடத்தில் உள்ளது.  இது கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கியுள்ளது. 

உலகளாவிய பசி குறியீடு:

உலகளாவிய பசி குறியீடு 2022 இல் இந்தியாவின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தரவுகளின்படி, 121 நாடுகளில் இந்தியா இப்போது 6 இடங்கள் சரிந்து 107 வது இடத்திற்கு பிந்தங்கியுள்ளது.

உலகளாவிய பசி குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் அடிப்படையிலான இந்திய அரசாங்கத்தின் தரவுகளுடன் ஒத்துப்போகிறது என்று சிட்னி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் இணைப் பேராசிரியர் டாக்டர் சால்வடோர் பெபோன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்க:   உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் நிலையும் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும்.....

ஆய்வறிக்கை 2014:

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2014 அறிக்கையில் சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது.  அதுவே இந்தியாவிற்கான தவறான மற்றும் பொறுப்பற்ற குறைந்த மதிப்பீட்டை உருவாக்கியது எனவும் போபென்ஸ் தெரிவித்துள்ளார்.  

உண்மையான நிலையை:

இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் அடிப்படையிலான பசி குறியீடுகள் பசியின் உண்மையான நிலையைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பெபோன்ஸ் நம்புவதாக கூறியுள்ளார். 

சைவ உணவின் விளைவு:

ஊட்டச்சத்தின்மை அல்ல, சைவ உணவு உண்பதன் விளைவு என்றும் பெபோன்ஸ் கூறியுள்ளார்.  பல இந்திய குழந்தைகளின் எடை உலகின் பிற நாடுகளின் குழந்தைகளை விட குறைவாக இருக்கலாம்.

ஆனால் அதற்கு  ஊட்டச்சத்து குறைபாடு என்று அர்த்தமல்ல. உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சைவம் அதிகமாக உள்ளது என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற தரவரிசை:

ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த அமைப்பான ஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச், உலகளாவிய பசி குறியீடு-2022 இல் இந்தியாவின் தரவரிசை பொறுப்பற்றது மற்றும் தவறானது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நற்பெயருக்கு களங்கம்:

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதன் பதிப்பாளர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதே நேரத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர் குழுவும் பெபோன்ஸ் கூறிய அதே வாதத்தையே முன்வைத்துள்ளது. 
ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சித் தடை, எடைக் குறைவு, பட்டினியால் மட்டும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிக்காது என்று ICMR கூறியுள்ளது.

ராகுல் காந்தி விமர்சனம்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உலகளாவிய பசி குறியீட்டு 2022 இல் இந்தியா 107 வது இடத்தில் உள்ளதற்காக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இன்னும் எவ்வளவு காலம் மக்களை உண்மையிலிருந்து தவறாக வழிநடத்தும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இப்போது பிரதமரும் அவரது அமைச்சர்களும் இந்தியாவில் பசி அதிகரிக்கவில்லை, மற்ற நாடுகளை போல் மக்கள் பசியால் வாடவில்லை என்று கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

                                                                                                      -நப்பசலையார்

இதையும் படிக்க:   அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன்...எதற்காக?!!