பேஸ்புக் நிறுவனத்தை நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்த முடியாது...

பேஸ்புக் நிறுவனத்தை நேரில் ஆஜராக்கி விளக்கமளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

பேஸ்புக் நிறுவனத்தை நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்த முடியாது...

பேஸ்புக் நிறுவனத்தை நேரில் ஆஜராக்கி விளக்கமளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பான பதிவுகளை நீக்கத் தவறிய குற்றச்சாட்டில்  நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அம்மாநில அரசின் நல்லிணக்க குழு, பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மோகனுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அஜித் மோகன் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் நல்லிணக்க குழு ஒன்றும் அரசியல் ரீதியான அங்கீகாரம் பெற்ற அமைப்பு இல்லை என்றும், மேலும் பேஸ்புக் நிறுவனத்தை குற்றப்பத்திரிக்கையில் இணைக்க கோருவது அதிகாரத்தை மீறும் செயல் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏற்கனவே மத்திய அரசின் விசாரணை கமிஷன் முன் பேஸ்புக் நிறுவனம் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளதையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கு  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதையும் உச்சநீதிமன்றம் சுட்டுக்காட்டியுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தை நேரில் ஆஜராக்கி விளக்கமளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.