விவசாயிகளின் பிரச்னைகளை அரசியலுடன் இணைக்கக்கூடாது...

விவசாயிகளின் பிரச்னைகளை அரசியலுடன் இணைக்கக்கூடாது என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.  

விவசாயிகளின் பிரச்னைகளை அரசியலுடன் இணைக்கக்கூடாது...

விவசாயிகளின் பிரச்னைகளை அரசியலுடன் இணைக்கக்கூடாது என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.  

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ‘அரியானா வரலாறு மற்றும் கலாசார அகடமி’ சார்பில் சர் சோட்டு ராம் என்பவரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் அடங்கிய 5 தொகுப்புகள் வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, விவசாயிகளின் வருமான பாதுகாப்பிற்காக ஊரக பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் என கோரினார்.

அதுமட்டுமல்லாது விவசாயிகள் நலம் சார்ந்த விஷயத்திற்குப அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும், அரசு மற்றும் விவசாயிகள் இடையே சமூகமான உறவு நீடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஓட்டுக்காக மட்டுமே விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்பட்டால், பிரிவினை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.