மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைது.!!

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைது.!!

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக், அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அப்போது, ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்குமாறு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பதவியை ராஜினமா செய்த அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, அனில் தேஷ்முக்குக்கு 5 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜரானார்.அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் நள்ளிரவு 12 மணியளவில் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார்.