இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு இன்று முதல் கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு இன்று முதல் கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி முதல் கர்நாடகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு அண்டை மாநிலமான மராட்டிய மாநிலத்திற்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பை, புனேவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மீரஜ், சோலாப்பூர், பந்தா்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் கூறியுள்ளது.