நிலத்துக்கு அரசு வேலையா...பீகாரில் அதிரடி....!!

நிலத்துக்கு அரசு வேலையா...பீகாரில் அதிரடி....!!

பீகார் சட்டப்பேரவையில், நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபிக்கும் சில மணி நேரங்களுக்கு முன், லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த 4 முக்கிய தலைவர்களுக்குச் சொந்தமான இடங்களில், சி.பி.ஐ. சோதனையைத் தொடங்கியுள்ளது. 

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், சமீபத்தில் ஆர்.ஜே.டி. கட்சியுடன் இணைந்து பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து சுமார் 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார், இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். 

மேலும் படிக்க:  வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட நில மோசடி தொடர்பாக டெல்லி, பாட்னா மற்றும் பீகார் மாநிலங்களின் 16 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

லாலுவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளம்  கட்சியின் சுனில் சிங்கின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது அவரது வீட்டில் பல்வேறு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு ரயில்வேயில் வேலை பெற்றவர்கள் நிலம் அன்பளிப்பாக வழங்கியது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

2004-2009 காலகட்டத்தில், யாதவ், ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் உள்ள குரூப் 'டி' பதவியில் மாற்றுத் திறனாளிகளை நியமித்ததற்குப் பதிலாக, தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் நிலச் சொத்தை மாற்றுவதன் மூலம் பணப் பலன்களைப் பெற்றுள்ளார் என்று சிபிஐ அதிகாரி கூறியுள்ளார்.

பாட்னாவில் வசிக்கும் பலர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மூலம் மாநிலத் தலைநகரில் உள்ள நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும் அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

இந்த நடைமுறையின் தொடர்ச்சியாக, பாட்னாவில் அமைந்துள்ள சுமார் 1,05,292 சதுர அடி நிலம், யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் ஐந்து விற்பனைப் பத்திரங்கள் மற்றும் இரண்டு பரிசுப் பத்திரங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தற்போது சிபிஐ சோதனையை கண்டித்து பீகார் சட்டப்பேரவை முன்பு எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: இங்கிலாந்தில் தலை வணங்கா இந்தியன்!!!!